அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயார். விரைவில் முதல்வர் வெளியிடுகிறார்
சென்னை, ஜூலை 15: பிளஸ் 2 வகுப்பு மாணவர் களுக்கான, மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிந் துள்ள நிலையில், மதிப் பெண் விரவங்கள் மற் றும் தேர்வு முடிவுகளை இரண்டொரு நாளில் முதல்வர் வெளியிட உள் ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் குறித்து, கடந்த மாதம் 26ம் தேதி அறி விப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார்.
அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாண வர்கள் 3 பாடங்களில் பெற்ற உயர் மதிப்பெண்க ளில் இருந்து 50 சதவீதம், பிளஸ் 1 தேர்வில் மாண வர்கள் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இருந்து 30 சதவீதம் மதிப் பெண்களை கொண்டுஅதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும் கணக்கிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி இம்மாதம் 31ம் தேதிக் குள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறி வித்து இருந்தார்.
அதற் கான அரசாணையையும் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் வழங்கும் போது எந்த முறைகளை கையாள வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதையடுத்து, அந் தந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை தேர்வுத்துறை ஏற்கெனவே கேட்டிருந்தது. அவற்றை பெற்று மேற்கண்ட அறிவிப் பின் படி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப் பெண் வழங்கும் பணிகள் இரவு பகலாக நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்ல தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.