தமிழகத்தில் 20ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறப்பா ???... : கல்வித்துறை ஆலோசனை
சென்னை, ஜூலை 14: தமிழகத்தில் தற் போது மூடியிருக் கும் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகு திறக்க தமிழக பள்ளிக் கல் வித் துறை ஆலோ சித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரி கள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு பள்ளிகள் திறக்க முதல் பிளஸ் 2 மற்றும் முடிவு எடுக்கப்பட்டு பத்தாம் வகுப்புகள் 2021 ஜனவரி மாதம் மட்டும் திறக்கப்பட்ட நிலையில் மீண் டும் கொரோனா 2ம் கட்ட அலை தொடங் கியது. இதையடுத்தும் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
அதனால், பொதுத் தேர்வு கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நி லையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டதால் தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கி யுள்ளது. அதேபோல பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக அண்டை மாநிலமான புதுச்சே ரியில் 16ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்று அந்த அரசு அறி வித்துள்ளது. இதைய டுத்து, தமிழகத்திலும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இருப்பினும் பள்ளி கள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்து கேட்ட பிறகே பள்ளி கள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்து இருந்தார்.
இந்நிலை யில், பள்ளிகள் திறப் பது குறித்து பள்ளிக்கல் வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது 20ம் தேதி அல்லது அதற்கு பிறகு பள்ளி களை திறக்கலாம் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டா லின் கவனத்துக்கு எடுத் துச் செல்லப்படும். அதன் மீது முதல் வர் பின்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.