தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது???... ; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருவெறும்பூர், ஜூலை 14: திருச்சி அடுத்த திருவெ றும்பூரில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 16ம் தேதி முதல் ஆரம்பிக்கப் பட உள்ளது.
இதுகுறித்து தமிழகத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோ சனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரி கள் தெரிவிக்கும் கருத்துக் களை முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்படும். தற்போதுள்ள கொரோனாசூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதல மைச்சர் என்ன வழி வகை கூறுகி றாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.
ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்து கணிப்பின் படி, 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இது நடப்பாண்டு அதிகமாக இருக்கும். அப்படி வரும் மாணவர்களை தக்கவைத் துக்கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசி ரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
மேலும் துறை ரீதியான ஆலோ சனை கூட்டத்தில் இது குறித்து ஆய்வு செய் யப்பட்டது. வருகிற மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வரு கிறோம், நீட்பயிற்சி கடந்த செப் டம்பர் 9ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது.
அரசின் நிலைப்பாடு நீட் வேண்டாம் என்பதுதான். தமிழகத்திற்கு விலக்கு என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். முதலமைச்சர் கூறியதுபடி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெறு வது தான் எங்கள் இலக்கு.
தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட படி 17 சத வீத இடைநிற்றலை 5 சதவீதமாக குறைப்பது தான் எங்களது இலக்கு. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பலர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அதிகாரிக ளிடம் கலந்தாலோசித்த நிலையில், முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கி றாரோ அதன்படி செயல்படுவோம்.
மேலும் 12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் தேர்வு வைக்கப்படும். அப்போதைய சூழ்நிலை யில் கொரோனா கட்டுக் குள் கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு உண்டான தேர்வு வைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்