நெல்லை, ஜூலை 15: கல்வித்துறையின் அனைத்து செயல்பாடு கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களு டன் நாளை (16ம் தேதி) காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர், தமிழகத்தின் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் தலைமையில் கறை பார்வையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பா டுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக் கான காணொலி வழி ஆய்வுக் கூட்டம் நாளை (16ம் தேதி) பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் நடக்கிறது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் கட்டு கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களி லும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்வது, இலவச மற் றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு முறையில் சேர்க்கப்ப டும்.
அனைத்து பள் ளிகளின் கல்வி கட் டண விபரத்தை கல்வி மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது. தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகா ரம் புதுப்பிக்கப்பட்ட விபரங்களை தயா ரித்து கல்வித்துறைக்கு அனுப்புதல், கல்வித் துறையின் உத்தரவை மீறி 100 சத வீத கல்வி கட்டணம் செலுத்தக் கோரிய புகார்கள் மீது உடனடி நடவடிக்கைமேற்கொண்டு அறிக்கை அனுப்புதல்,
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமையை தடுக்க உள்ளூர் புகார் குழு அமைத்து எடுக்கப் பட்ட நடவடிக்கை விப ரம், கல்வித் தொலைக் காட்சி ஒளிபரப்பை மாண வர்கள் பயன் டுத்து வது. மாணவர் சேர்க்கை விபரங்கள் பதிவு, பள்ளிகளில் மராமத்துப் பணிகள், ஆசி ரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விபரம், லேப்டாப் கையிருப்பு விபரம் உள் ளிட்ட செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே இவை தொடர்பான விபரங் களுடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது