உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு. D.Y. சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு D.Y. சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவின் உச்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த என்.வி.ரமணா கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் புதிய தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

     அவருக்கு 74 நாட்கள் மட்டுமே பதவிக்காலம் மீதம் இருந்த நிலையில் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க லலித் பரிந்துரை செய்தார். பகிரங்க வார்னிங்.. ஆளுநரை விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவி டிஸ்மிஸ்.. ஆரிப் கான் எச்சரிக்கை வருகிற நவம்பர் மாதம் எட்டாம் தேதியுடன் உமேஷ் உதய் லலித்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட்டை நியமிக்க வழங்கப்பட்ட பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கியுள்ளார். இதையடுத்து சந்திர சூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் ஒன்பதாம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post
Loading...