பொதுத்தேர்வு அட்டவணை முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகு வெளியிடப்படும்

 உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் ஆனது தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படவில்லை. எனவே பொதுத்தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில். 

   பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் இன்று (28.12.2020) அளித்த பேட்டியில் தமிழகத்தில் பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் மற்றும் பொது தேர்வு கால அட்டவணையை முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே வெளியிடப்படும் என்பதை தெரிவித்துள்ளார். 

  பாடங்கள் குறைக்கப்பட்ட அவளும் குறைக்கப்பட்ட பாடங்களிலிருந்து வினாக்களை எடுத்து பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்பதையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post
Loading...