சேலம், ஜூன் 29: தனியார் பள்ளிகளில் கட்டண நிலுவை கேட்டு டிசி தர மறுப்பதால், புதிய பள்ளிக்கு மாறும் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
புதிதாக சேரும் ஒன்றாம் வகுப்பு, பள்ளிமாறும் 6மற்றும் 9ம் வகுப்பு மாண வர்களுக்கும் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகளில் படித்த மாணவர்களும், அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனிடையே கட்டண நிலுவையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பெற் றோர்கள் கூறியதாவது: மாற்றுப் பள்ளிகளில் சேர மாணவர்களின் டிசி அவசியமில்லை என அரசு தெரி வித்தாலும், பல தனியார் பள்ளிகளில் கட்டாயம் டிசியை கொண்டு வர வேண்டும் என வலியுறுத் துகின்றனர். அதே சமயம், ஏற்கனவே படித்த பள்ளிகளில் சென்று டிசியை கேட்கும்போது, கட்டண நிலுவை உள்ள தாக கூறி டிசி தர மறுக் கின்றனர். கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளே திறக்காத நிலையில், ஆன் லைன் மூலம் மட்டுமே வகுப்பு கள் நடந்தன. இதனால் கட்டணத்தை குறைத்து பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள் ளது. ஆனால் பெரும் பாலான தனியார் பள்ளிகள், முழுகட்ட ணத் தையும் செலுத் து மாறு பெற்றோரை வற்புறுத்துகின்றனர். குறிப்பாக, ஊரடங்கால் முழுமையாக மூடப் பட்ட பள்ளிகள் கூட, கட்டணத்தை வசூலிக்க கறார் காட்டுகின்றன. இதே போல் புதிதாக சேரும் பள்ளிகளும் விருப்பப்படி கட்ட ணத்தை கேட்கின்றனர்.
இதனால் பழைய பள்ளியில் டிசியை பெற முடியாமலும், புதிதாக வேறொரு பள்ளியில்சேர்க்க முடியாமலும் தவிக்கும் நிலைக்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பொருளா தார ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அன்றாட செலவுக்கு கூட பணம் இன்றி தவிக்கின்றனர். தற்போது கல்வி கட்ட ணத்தை செலுத்த கட் டாயப்படுத்துவதால், செய்வதறியாது தவிக்கி றோம். எனவே, மூடப் பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நிலுவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அத் துடன், பள்ளிக்கல்வித் துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக வேறொரு பள்ளியில் சேர்க்க முடியாமலும் தவிக்கும் நிலைக்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதாரரீதியாக பாதிக்கப் பட்டுள்ள ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அன்றாட செலவுக்கு கூட பணம் இன்றி தவிக்கின்றனர். தற்போது கல்வி கட்ட ணத்தை செலுத்த கட் டாயப்படுத்துவதால், செய்வதறியாது தவிக்கி றோம். எனவே, மூடப் பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நிலுவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், பள்ளிக்கல்வித் துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பெற்றோர்கள் கூறினர்.