தமிழகத்தில் உள்ள பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் இன்றளவும் வெளியாகாத நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வந்து ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பொறியியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.