110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு வரவேற்பை விட எதிர்ப்புகளே விஞ்சி நிற்கிறது

25.02.2021 சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு வரவேற்பை விட எதிர்ப்புகளே விஞ்சி நிற்கிறது. சுய பரிசோதனைக்கு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுகோள்.


        25.02.2021 நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கீழ்வரும் அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டு சாதனைகளின் சிகரத்தை தொட்டுள்ளார். சென்ற ஆண்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59 ஆண்டாக உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆண்டாக உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் சங்கங்கள், அரசுப் பணியாளர் சங்கங்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அறிவியுங்கள் என்று இதுவரையில் கோரிக்கை விண்ணப்பம் முதலமைச்சரிடம் அளித்துள்ளார்களா? 

     மத்திய அரசு 2004 ஏப்ரல் முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடைய அரசு 2003 ஏப்ரல் முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வரை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடி வருகிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் அறிக்கையிலும் 110 விதியின் கீழும் அடுத்த முறை ஆட்சிக்கு வருகிற போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்தார்கள். அம்மாவின் அரசு என்று போற்றி வணங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பிப்ரவரி 24 அம்மா அவர்களுடைய 73வது பிறந்தநாள் கொண்டாடுகின்ற போதாவது இந்த கோரிக்கையை நினைவில் கொண்டு வந்து 110 விதியின்கீழ் அறிவிப்பார் என்று ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் அனைவரும் ஆர்வப் பார்வையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் .ஆனால் எந்த அறிவிப்பும் இன்று வெளிவரவில்லை. 

         அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வீதியில் நிற்கிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் உணவு விடுதிகளில் வேலை செய்து வருகிறார்கள். துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பதெல்லாம் இந்த முதலமைச்சருக்கு தெரியாதா?10 லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்து சிறுதொழில் செய்யக்கூட வாய்ப்பில்லாமல் இளமையினை  இழந்து வருகிறார்கள். சுமார் 80 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வேலையின்றி காத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் 40 வயதை கடந்தவர்கள். அவர்கள் இனி அரசுப் பணியே இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகி உள்ளார்கள். ஒரு கோடி இளைஞர்களுடைய உணர்வுத் தீ எழுச்சியாக இந்த அரசுக்கு எதிராக பற்றி எரியத்தானே செய்யும் .அன்றாடம் வேலைவாய்ப்பு பற்றி கூட்டங்களில் பேசிவரும் முதலமைச்சர் அவர்கள் ஒரு கோடி இளைஞர்கள் பற்றிய உணர்வு இவரது நினைவுக்கு வரவில்லையா?

🟪 ஓய்வு பெறும் வயதினை உயர்த்தியதன் மர்மம் என்ன?

🟪ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் இவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். அந்த தொகையினை மீதம் செய்து ஆட்சி விரும்பும் திட்டங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே நிலைமை தொடர்ந்தால் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரித்தாலும் அதிகரிக்குமே தவிர எவரும் ஓய்வூதியத் தொகையை முழுவதும் ஒரே சமயத்தில் பெறுவதற்கு 100 விழுக்காடு வாய்ப்பே இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.5.70 கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு ஓய்வூதியத் தொகையை எங்கிருந்து கொடுக்கப் போகிறார்கள்?. பிறக்கும் குழந்தைக்கு 62,000 ரூபாய் கடன் சுமையை வைத்திருக்கிறார்கள்.

🟪போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும் ஐந்து ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற முடியாமல் எப்படி களத்தில் நின்று போராடி வருகிறார்களோ அதே நிலைமைதான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் ஏற்படப்போகிறது. பங்களிப்பு ஓய்வூதியத்தில் இணைந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் செலுத்திய தொகை 30 ஆயிரம் கோடிக்கு மேல் எங்கே இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இனிமேல் இந்த அரசு நீடித்தால் பென்சன் தொகை பாண்டுகள் உருவத்தில் தான் நமக்கு வந்து சேரும் அபாயம் உள்ளது.

🟪 மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அரசுக்கு All Pass Government CM என்று  மாணவர்களாலும் பெற்றோர்களாலும் புகழாரம் சூட்டி முழக்கமிட்டு வருகிறார்களா? இல்லவே இல்லை. கொரோனா பெயரைச் சொல்லி ஓராண்டு காலமாக மாணவர்களை கல்விச் சாலைக்கு அனுப்பாமல் அவரவர்களின் குடும்பத் தொழிலை செய்வதற்கு காரணமான அரசு என்பதை மனசாட்சி உடையவர்களால் மறுக்கத்தான் முடியுமா? 9 10 11 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு அரசு அனுமதித்த போது பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எஞ்சியிருக்கும் இந்த இரண்டு மாதமாவது ஏழை, எளிய பெற்றோரின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று பள்ளிச் சூழலில் அவர்கள் இரண்டறக் கலக்க வேண்டும் என பெரிதும் விரும்பினார்கள். ஆனால் முதலமைச்சர் அவர்கள் என்ன நினைத்தார் என்றே தெரியவில்லை. தேர்தலை மையப்படுத்தி கொண்டு 9 10 11 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதா விட்டாலும் தேர்ச்சி என்று அறிவித்துவிட்டால் பெற்றோர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறாரா? பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிப்பு வந்தாலும் வரலாம் ஆச்சரியப் படுவதற்கில்லை.

🟪 பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை நவீன குலக்கல்வி திட்டமாக புகுத்த முன்வந்துள்ளார்களா? என்று நம்மால் நம்ப முடியவில்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என ஒரு அரசு பாடுபடலாம். படிக்கவே தேவையில்லை என்று மழலைப் பருவம் முதல் மாணவப் பருவம் வரை உணர்வினை ஊட்டி வளர்ப்பார்களேயானால் இதற்கெல்லாம் இவர்கள் வணங்கி வருகிற அம்மா தான் நல்வழியினை காட்ட வேண்டும்.

🟪 கல்விக் கண் திறந்த காமராசர் ஆட்சியில் பள்ளிகளை திறந்த காகத்தான் வரலாறு உண்டு. திறந்த பள்ளிகளை மூடுவது இவர்கள் காலத்தில்தான் என்று குமுறுகின்ற மக்களின் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும் ஒரு வினாடியாவது நேரம் ஒதுக்கி கொண்டு சிந்திக்க முன் வருவார்களா? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதுதான் நமது மூத்தோர் சொல் ஆகும். ஆனால் எழுதினாலும் எழுதாவிட்டாலும் படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கின்ற அரசினை நாம் பெற்றுள்ளோம்.

🟪 மக்களின் தீர்ப்பே.! மகேசன் தீர்ப்பாகும்..!! என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

பதிவுகள் தொடர்ந்து உங்கள் இதயத்தை தொட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும், வாழ்த்துக்களுடன் அண்ணன்,

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement 

1 Comments

  1. Sir for 12th std all pass podunga nd neet exam cancel pannunga pl

    ReplyDelete
Previous Post Next Post
Loading...