கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல் எளிய வகையில் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.
ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடங்கள் குறைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் சுலபமாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பது பற்றி இன்னும் முறையான அறிவிப்பு வெளியிடப்பட வில்லை எனவே இந்த ஆண்டு பொதுத் தேர்வு எளிமையாக இருக்கும் என்பதை மட்டும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவர்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336939 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .