தேசிய திறனாய்வு தேர்வு எனக்கூறப்படும் என்டிஎஸ்சி (NTSE) தேர்வானது இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் 21.11.2020 முதல் 30.11.2020 வரை தங்களுடைய பள்ளிகளில் பெற்று அதை பூர்த்தி செய்து தங்களுடைய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்தத் தேர்வுகளை நடத்த பள்ளிகளுக்கு ஒரு சில நிபந்தனைகளை நமது அரசானது வழங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என பல நிபந்தனைகளுடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் கேள்விகளானது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகத்தில் இருந்து இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக நமது தமிழக அரசானது ஒரு சிறப்பு கையேட்டினை வெளியிட்டு இருந்தது அந்த கையேட்டில் என்டிஎஸ்சி (NTSE) போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அந்த தேர்வுகளை எவ்வாறு எழுத வேண்டும் , அந்த தேர்வுக்கு தயாராவது எப்படி போன்ற அனைத்தையும் 300க்கும் மேற்பட்ட பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.
இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றால் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊர் நிதி உதவியாக அரசு அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும். எனவே அனைத்து மாணவ செல்வங்களுக்கும் இந்த சிறப்பு கையேட்டினை கொண்டு சேர்க்கவும்.