நல்ல உறக்கம் வர சில குறிப்புகள்
வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
லெட்டூஸ் கீரைகளின் விதைகளை எடுத்து 2 டம்ளர் நீர் விட்டு பாதியாக வரும் வரை சுண்ட காய்ச்சி இரவு குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் தூக்கம் வரும்.
நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.
வேப்பிலையை நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும்.
அரை கப் ஆரஞ்சு பழச்சாற்றில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை கலக்கி படுக்கைக்குப் போகும் அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட தூக்கம் வரும்.
சர்பகந்தா செடியின் வேரை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி கலந்து காலை, இரவு சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
பாலில் ஒருதேக்கரண்டி தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
ஒரு டம்ளர் வெது வெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒருதேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
தயிரை எடுத்து தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் தூக்கமின்மை குறையும். அதோடு அதிகமாக தயிரை சாப்பிட்டு வருவது மிகவும் சிறந்தது.
கெட்டித் தயிருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட தூக்கமின்மை குறையும்.
சுரைக்காயை அரைத்து சாறு எடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணெய் கலந்து நன்றாக இரவு உச்சந்தலையில் மீது நன்றாக தேய்த்து தடவி வந்தால் தூக்கமின்மை குறையும்.
ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பால் மற்றும் தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
வெங்காயம்,உப்பு இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து அதனை சுடுச்சோற்றுடன் கலந்து சாப்பிட சுகமான தூக்கம் வரும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட தூக்கமின்மை குறையும்.
ஆரைக்கீரை, சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட தூக்கமின்மை குறையும்.
மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.
ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.
வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் குடித்து வர தூக்கமின்மை குறையும்.
பேரீட்சை, முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்.
இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் தூக்கமின்மை குறையும்.
இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,