10th and 12th PTA Question Papers and Solution Book is Launching Soon!!
PTA book 2023-24 Download Link |
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள், கணித தீர்வுப்புத்தகம் மற்றும் கணித COME புத்தகம் (தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) அச்சிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் 20.12.2023 முதல் கீழ்க்கண்டவாறு விற்பனைக்கு கிடைக்கும்.
- 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) - ரூ.120/-
- 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) - ரூ. .175/-
- 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) - ரூ. .175/-
- 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) - ரூ. .160/-
- 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) - ரூ. .160/-
- 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (ஆங்கில வழி) - ரூ. 160/-
- 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) - ரூ. 160/-
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு) 6 மாதிரி வினாத்தாள்கள் வீதம் பொதுத்தேர்வு கட்டமைப்பின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு கணித தீர்வு புத்தகத்தில் (Solution Book) குறிக்கோள் வினாக்கள் உட்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயிற்சி கணக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப்பாடவரிசைக்கு கணித தீர்வுப்புத்தகம் (Solution Book) தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடநூலில் உள்ள அனைத்து பயிற்சி கணக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் / மாணவர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித COME புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் (C-Classification of Questions , O-Objective Type Questions - குறிக்கோள் வினாக்கள் , M-Model Question Papers, E-Evaluation Scheme மதிப்பீடு முறை) உருவாக்கப்பட்டுள்ளது. பாடநூலில் உள்ள அனைத்து வினாக்களும் 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் என வகைப்படுத்திக் காண்பிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு வினாவின் விடைக்கு கொடுக்கப்படும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வில் எவ்வாறு பிரித்து வழங்கப்படுகிறது என்பதனை புரிந்து கொள்வதோடு மாற்று முறையிலும் எவ்வாறு விடையளிக்கலாம் என புதுமையான முறையில் மாணவர்களுக்கு பெரிதும் பயன்தரும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பிற்கான அறிவியல் மற்றும் கலைப்பாடப்பிரிவிற்குரிய மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் இயற்பியல் பாடத்திற்கான தீர்வு புத்தகம் (4 புத்தகங்கள்) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சகத்தில் உள்ளதால் விரைவில் வரவிருக்கிறது.
10th and 12th Standard PTA Book Purchasing Places |
Shall I supposed to buy online ??? Amy possible is there???
ReplyDelete