முடி கொட்டுதல் பிரச்னைக்கு முத்தான தீர்வுகள்!

முடி கொட்டுதல் பிரச்னைக்கு முத்தான தீர்வுகள்!

      இன்றைய சூழலில் முடி கொட்டுதல், இளநரை, வழுக்கை, பொடுகு போன்றவை பெண்களின் தலையாய பிரச்னையாக உள்ளது... அவற்றுக்கான காரணங்களையும் எளிய தீர்வுகளையும் வழங்குகிறார் கேர் அண்ட் க்யூரின் உரிமையாளர் கீதா அசோக்...

ஹேர்ஃபால் பிரச்னையின் ஆரம்பம்:

     ஒரு நாளைக்கு எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை பொறுத்தே, அது இயல்பானதாஅல்லது பிரச்னையா என்பதைத் தீர்மானிக்க முடியும். பொதுவாக, ஒரு நாளைக்கு 50 - 100 முடிவரை உதிரலாம். கவலைப்படத் தேவையில்லை. ஆனால், 100 முடிக்கும் அதிகமாக, கொத்துக் கொத்தாகக் கொட்டும்போது, அது ஹேர்ஃபால் பிரச்னை ஆகிறது. ஆண், பெண், வயது பாகுபாடின்றி யாருக்கும் இது நிகழலாம். ஆரம்பத்திலே தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

தடுக்கும் முறைகள்:

ஆயில் மஜாஜ்:

   பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய் இவற்றை சம அளவில் எடுத்து, மஜாஜ் செய்து, ஒரு மணிநேரம் கழித்து தலைக்கு குளித்துவர, உடல் சூடு,முடி பலவீனம் ,ஆகிய காரணங்களால் முடி உதிர்வது தடைபடும்.
வறட்சியால் முடிக்கொட்டுவதற்கு தீர்வு:

    100 மில்லி பாதாம் ஆயில்,100 மில்லி ஆலிவ் ஆயிலுடன் ஒரு கைப்பிடி அளவு பிரிஞ்சி இலை சேர்த்து 10 நாள் எண்ணையை ஊறவிடவும். அதன் பின் இந்த எண்ணெயை தேய்த்து மஜாஜ் செய்து குளித்து வர,  வறட்சியால் முடி கொட்டுவது காணாமல் போகும்.

   வறண்ட கூந்தல் உள்ளவர்கள்,  25 மில்லி ‘ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்’ உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து, நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி.

ஷாம்பு தேர்வு:

   அதிக கெமிக்கல் உள்ள ஷாம்புகளை பயன்படுத்துவதும் முடி உதிர்வதற்கு ஒரு அடிப்படையான காரணம். வெறும் விளம்பரங்களை பார்த்து எப்போதும் ஷாம்புக்களை தேர்வு செய்யாதீர்கள். உங்கள் முடியில் உள்ள பிரச்சனைகள்,முடியின் தன்மைக்கு ஏற்ப ஷாம்புக்களை தேர்வு செய்வது அவசியம். ஷாம்பு தேர்வின் போது அதிக அளவு கெமிக்கல் இல்லாத ஆயுர்வேதிக் ஷாம்புக்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
இளநரைக்கான தீர்வு:

     அதிகப்படியான கெமிக்கல் உள்ள ஷாம்புக்கள் உங்கள் கூந்தலை விரைவில் நரைக்கச்செய்யும். இளநரையை தடுக்க எளிய வழி..நீலஅவுரி இலை,வெள்ளை கரிசலாங்கண்ணி,மருதாணி இலை,கறிவேப்பிலை,கீழாநெல்லி இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து மையாக அரைத்து  சிறிய தட்டுக்கள் போன்று தட்டி ,நிழலில் ஒரு வாரம் உலர்த்தி எடுங்கள்.பின் தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமளவில் எடுத்து உலர்த்திய கலவை அதில் போட்டு ஊறவிடவும். தினமும் இதை தலைக்கு தேய்த்து குளித்து வர,  இளநரை காணாமல் போகும்.

     இளநரை உள்ள பெண்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, பீட்ருட் சாற்றுடன் ஹென்னா (இரண்டும் கூந்தலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்), 10 கிராம் சர்க்கரை, 2 டீஸ்பூன் கிராம்புத் தைலம் கலந்து தலைக்குப் பேக் போட்டு அலச, முடி இயற்கைக் கருமை பெற்று பளபளக்கும்.

தினமும் தலைக்கு குளிப்பது நல்லது:

    தினமும் தலைக்கு குளிப்பதால் முடி கொட்டும் என்பதெல்லாம் தவறான கருத்து. மாறாக வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் தலையை அலசுவது ஆரோக்கியத்தை தரும். இப்படி செய்வதால் தலையில் அழுக்கு ,பொடுகு சேர்வது போன்ற காரணங்களால் முடி கொட்டும் பிரச்சனை காணாமல் போகும்.

மாதம் ஒரு முறை ஹேர்கட்:

     சிலருக்கு முடியின் அடி பிளவுபட்டு, முடியும் மெலிந்து வளர்ச்சியின்றி காணப்படும். மாதம் ஒரு முறை கீழ் முடியை மட்டும் சிறிது ட்ரிம் செய்து கொள்வது ஆரோக்கியமான ஒரு விஷயம்.
பேன் தொல்லைக்கு பை - பை:

     பேனின் கழிவுகள் மண்டை ஓட்டில் சேர்வதாலேயே அரிப்பு ஏற்படும். இதனால் மண்டை ஓட்டின் துளைகள் மூடப்பட்டு, முடி கொட்டும். அதற்கான சுலபமான தீர்வு..

    நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சம்பங்கி விதைகளை வாங்கி, நன்றாக இடித்து 100 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து, ஒரு வாரம் ஊறவைத்து, தினமும் இரவு அந்த எண்ணெயை தலையில் தேய்த்து, காலையில் தலைக்கு குளிக்க, பேன் தொல்லை இனி இல்லை,

நேச்சுரல் சீரம்:

    முடிச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, பெண்கள் சீரம் தேய்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஆனால் அது நாளடைவில் கூந்தலை வறட்சிக்கு உள்ளாக்கும். அதற்கு மாற்றாக ஜோ- ஜோ ஆயில் (இலந்தை பழவிதை எண்ணெய்) எலுமிச்சை சாறு,லாவண்டர் ஆயில் ஆகியவற்றை சம அளவில் எடுத்து  தினமும் தலையில் லேசாக தேய்த்துக்கொண்டு வெளியே செல்ல, கூந்தல் சிக்கல் இன்றி ஆரோக்கியமாக காட்சி அளிக்கும்.
உணவு முறை:

   இவை எல்லாவற்றிற்கும் மேலாக,  நம்முடைய உணவு பழக்கத்தில் கவனம் காட்டுவதும் மிகவும் அவசியமான ஒன்று. தினமும் ஒரு கீரை வகை, பேரிச்சம்பழம், வால்நட், பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்ல பயன் அளிக்கும்.


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...