உலக சிரிப்பு தினம் இன்று. (02.05.2021)

மே 2,

உலக சிரிப்பு தினம் இன்று.

மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை என்பது தான் உண்மை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து மகிழ்கின்றனர்.

இத்தனைக்கும் இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா என்பவர்தான் ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர். இப்போ மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கேன 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் செயல்படுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது, இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது. மேலும், அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.

அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது. இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக இருக்கிறது. நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான். அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்விடுகின்றன என்பது எதற்த்தமாகும். சிரிப்பு என்பது ஒரு யோகக் கலையாகக் கூட சொல்லலாம். இவை, உடம்புக்கும் மனதிற்கும் நல்லதாகும். எனவே, சிரிப்போம் சிந்திப்போம் சிநேகமாக வாழ்வோம். ஒவ்வொரு தினமுமே சிரிப்பு தினமாகக் கொண்டாடுவோமே.



Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...