அஜீத் குமார் மே மாதம் 1 ம் தேதி, 1971 ம் ஆண்டில் பிறந்தார்.

மே 1,

    எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்களால் ‘தல’ என அன்போடு அழைக்கப்படும் அஜீத் குமார் பிறந்த தினம் இன்று.

    தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். 

    மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

    அஜீத் குமார் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்தைச் சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ம் தேதி, 1971 ம் ஆண்டில் பிறந்தார். 
அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அனில் குமார் சியாட்டலிலும் பணிபுரிகிறார்கள்.

      என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் சென்னையில் வளர்ந்தார். 
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். 
இதனால், 1986 ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

      தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

    1991 ல், தனது 20வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டு கழித்து, 1992 ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. 
அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும்.


வரலாற்றில் இன்று 01.05.2021 . வரலாற்றில் இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் (01.05.2021) -

Tags (Don't Read This) :- 

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...