12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஆரம்பிக்கலாம்

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறையில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்.


2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.


 1 . பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். 


3 . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம். 


4 . மிக அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் ( கொள்குறிவகை ) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு , மாணவர்களுக்கு வழங்கி , அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். 


5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம். 


6 . மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இந்த Proceedings இனை பதிவிறக்கம் செய்ய கிழே டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுத்துடன் ஒரு பட்டன் இருக்கும் அந்த பட்டனை அழுத்தவும்.

Download Click Here  


The Materials & Questions in our Website are not prepared by us . The Entire Copyright of that Material is owned by the Respective owner and Author of that material. We had Published this Only for Educational Purposes.

Send Your Valuable Materials and Question Papers to kalvikadal.in@gmail.com or Whatsapp & Telegram - 
9385336929


=====================================




Tags (Don't Read This) :- 

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...