மத்திய சென்னை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 59 பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பருவ பாடப்புத்தகங் கள் சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. சென்னை , ஜூன் 16: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் விரை வில் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்களை வினியோகம் செய்யும் பணி 27 மாவட் டங்களில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள் ளது. முன்ன தாக, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக ளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் மதிப் பீடு செய்யும் பணிக்காக 14ம் தேதி அனைத்து ஆசி ரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவித் ததால், நேற்று முன்தினம் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர்.
இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் கடந்த 7ம்தேதி வெளியிட்டு இருந்தார். அதன்படி நேற்று முன்தி னம் 27 மாவட்டங்களில் உள்ள மேனிலைப் பள் ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலைப் பள் ளிகளில் 1, 6, 9ம் வகுப்புக ளில் மாணவர் சேர்க்கை யும் தொடங்கியது.
இந்த பணிகளை செய் யவும், பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை செய் யவும் ஒரு பகுதி ஆசிரியர் கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சி யாக, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர்கள் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலவசப் பாடப்புத்தகங் கள் அங்கிருந்து பள்ளி களுக்கு பிரித்து அனுப்பும் பணியும் நேற்று தொடங்கி யது. 27 மாவட்டங்களில் மட்டும் இந்த பணி நேற்று தொடங்கியது. இந்த புத்த கங்கள் பற்றி திறக்கப்பட் டதும் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.