நெல்லை , ஜூன் 16: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேர குழந்தைகள் ஆர்வமுடன் வருகின்றனர். 14 மாதங்களாக வீடுகளில் முடங்கியுள்ள மாணவ, மாணவிகள் நேரடி வகுப்பு தொடங்கும் நாட்களை எதிர் பார்த்து காத்திருக் கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை பரவத்தொடங்கியது. இத னால் இன்றுவரை கல்வி நிலையங்கள் செயல்பட வில்லை . கடந்த கல்வி யாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நீண்ட இடைவெ ளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட் களே நேரடி வகுப்புகள் நடந்த நிலையில் மீண்டும் 2ம் அலை கொரோனா பர வல் வந்ததால், அவர்களுக் கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த கல்வியாண்டு முழுவதும் இணையதளத்திலும், கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டும் மற்ற மாணவர் களுக்கு வகுப்புகள் நடந்தன.
இந்நிலையில் தற்போது 2ம் அலை குறைந்து வரு வதால் அனைத்து வகுப் புகளுக்கும் மாணவர் சேர்க்கை பணிகள் நேற்று முன்தினம் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் பள்ளிகளுக்கு வருகின்ற னர். பிளஸ்1 சேர்க்கை மட்டுமின்றி 1, 6, 9ம் வகுப் புகளுக்கும் மாணவர் சேர்க்கை பணிகள் மும்முர மாக தொடங்கியுள்ளன. தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் அவர்கள் 6ம் வகுப்பில் சேருவதற்கு டிசி உள்ளிட்ட சான்றுகளை வழங்கவும் அவர்க ளது விவரங்களை பள்ளி களுக்கு வழங்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற் றம் செய்யும் பணிகளை யும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
அரசு பள்ளிகளுக்கு நேற்று பல ஆசிரியர்களும் ஆர்வமுடன் வந்திருந்தனர். நெல்லை மாவட்டத் தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேருவதற்கு குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அவர் களுக்கு சேர்க்கை நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்து சேர வும் மாணவர்கள் ஆர்வமு டன் உள்ளனர். அவர்கள் கூறுகையில், 14 மாதமாக வீட்டிலேயே இருக்கிறோம். கொரோனா தொற்று குறைந்து எப்போது பள் ளிகள் திறக்கப்பட்டாலும் வருவதற்கு ஆர்வமாக இருக்கிறோம், என்றனர்.