கல்வி தொலைக்காட்சி அட்டவணையை அனைத்து பெற்றோருக்கும் தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆணையர் உத்தரவு.
சென்னை , ஜூன் 22: கல்வித் தொலைக்காட்சி அட்டவ ணையை பெற்றோருக்குத் தெரி யப்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தர விட்டுள்ளார். இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள், மாவட்டக் கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள சுற் றறிக்கை: கரோனா பெருந் தொற்று பரவலின் காரண மாக பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகள் தடையில் லாமல் கிடைப்பதற்காக கல் வித் தொலைக்காட்சி சேனலில் வகுப்பு வாரியாகவும் பாடவாரி யாகவும் கற்றல்-கற்பித்தல் ஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வகுப்பு வாரியாகப் பாடங்கள் ஒளிப் ரப்பாகும். இந்தப் பாடங்களின் மறு ஒளிபரப்பு இரவு 10.30 மணி முதல் காலை 5.30 மணி வரைஒளிபரப்பப்படும்.
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச் சிகளின் அட்டவணையை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண் டும். இது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, ஆசி ரியர்கள் மூலம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல், கால அட்டவணையை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-ஆப்) மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்க ளின் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ்-ஆப் செயலி இல்லாத பெற்றோர்களுக்கு, பாடப்புத்தகங்களை வாங்க வரும்போது கல்வித் தொலைக் காட்சியின் அட்டவணையின் நகலை வழங்க வேண்டும்.
சந்தேகங்களுக்குத் தீர்வு : மாணவர்கள் கல்வித் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்ப் பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஏற் படும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியரின் செல்லிடப்பேசி எண் களை மாணவர்களுக்கும், பெற் றோர்களுக்கும் வழங்க வேண் டும். மாணவர்களுக்கு நடத் தப்பட்ட பாடங்களுக்கு உரிய பயிற்சி வினாக்களை பெற்றோர்களின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ் ஆப் இல்லாத பெற்றோர்களை பள்ளிக்கு நேரடியாக அழைத்து பயிற்சி வினாக்களை கொடுத்த னுப்ப வேண்டும். விடைத்தாள் களை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் பெற்று திருத்தி ஒப் படைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் இதனைச் செய்யவேண்டும்.
யூ டியூப் சேனலிலும் காணலாம்: நேரடி வகுப்புகள் தொடங் கப்படும் வரையில் இந்த நட வடிக்கைகள் தொடர வேண் டும். அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதி இல்லாத மாணவர் களைக் கணக்கிட்டு, அந்த மாண வர்களுக்கும் உரிய கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் இந் தப் பாடங்களை மாணவர்கள் https://www.kalvitholaikaatchi.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், கல்வித் தொலைக் காட்சியின் யு-டியூப் சேனலின் மூலமாகவும் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சேனல்களில் ? : தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் (அரசு கேபிள் இணைப்பில் 200-ஆவது சேனல்) நாள் முழுவதும் வகுப்பு வாரியாக பாடங்கள் சார்ந்த காணொலிகள் ஒளிபரப்பா கும். இதுதவிர புதுயுகம், ராஜ், வசந்த், கேப்டன் நியூஸ், சத்தியம், லோட்டஸ், மதிமுகம், மக்கள், எஸ்சிவி கல்வி ஆகிய சேனல்க ளில் குறிப்பிட்ட நேரங்களில் மறுஒளிபரப்பு செய்யப்படும். நேரம், பாடங்கள் சார்ந்த அட்ட வணை பள்ளிகளின் சார்பில் வழங்கப்படும்.
Tags (Don't Read This) :-
Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,