குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 24: அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவி ரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாகப் பணிக்கு வருவதில்லை என்று பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: அரசுப் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை பணிகள் நடை பெறுவதால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தின மும் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இது தவிர வெளியூர் சென்றுள்ள ஆசிரியர்களும் உடனடி யாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்குத் திரும்ப வேண்டும். பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பணிகளில் எவ்வித சுணக்கம் ஏற்படக்கூடாது.
ஒரே ஆசிரியர்களை தொடர்ந்து பணிக்குவருவதற்கும் கட்டாயப்படுத்தாமல், அனைவருக்கும் வேலைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.