இலவச நீட் பயிற்சி வழங்கப்படாததால் அவதிப்படும் அரசு பள்ளி மாணவர்கள்
சென்னை , ஜூலை 15: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச நீட்ப யிற்சி முறையாக வழங்கப்படாததால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அவ திப்பட்டு வருகின்றனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். தமிழ கத்தில் நீட் தேர்வு நடைமுறை 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக வில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண் ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதை கருத்தில் கொண்டு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜேஇஇ நீட் தேர்வு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது.
இதற்காக இந்தப் பயிற்சிகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அந்த நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு விடியோ கான்ஃபரன்சிங், நேரடி முறையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்றனர். இதற்கிடையே மருத்துவப் படிப் புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத வீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமி முக அரசு உத்தரவிட்டது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர்.
பாதியில் தடைபட்ட பயிற்சி வகுப்பு: இந் தநிலையில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான இலவச நீட்பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம் பரில் இணையவழியில் தொடங்கப்பட்டது. சுரோனா பரவல், பயிற்சிக்கான சரியான வழி காட்டுதல் இல்லாதது, ஒருங்கிணைப்பு குறை பாடு போன்ற காரணங்களால் ஜனவரி மாதத் துக்குப் பின்னர் இலவச நீட் பயிற்சி வகுப்பு கள் முறையாக நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் முடிந்தபின் நீட் பயிற்சி நடத்தப்படும் என்று
பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது. ஆனால் கரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்துமாணவர்களும் கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங் கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
குழப்பத்தில் மாணவர்கள்: இந்தநிலையில் வரும் செப்.12-ஆம் தேதி நீட் தேர்வு நடை பெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறி வித்துள்ளது. அதேவேளையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகி றது. இத்தகைய சூழலில் போதிய பயிற்சி இல் லாததாலும், தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி சேர முடியாததா லும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள் னாகியுள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை: எனவே, மாணவர் களின் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறந்த வல்லுதர்களைக் கொண்டு நீட் தேர் வுக்கான இலவச பயிற்சி வகுப்பு:களை தமிழக அரசு உடனடியாகத்தொடங்க வேண்டும். இல் லாவிட்டால் நீட்தேர்வில் அரசுப்பள்ளி மாண வர்களின் தேர்ச்சி சரியும் என ஆசிரியர்கள், கல் வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகா ரிகளிடம் கேட்டபோது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் படித்து நீட்தேர்வில் பங்கேற்க விருப் பமுள்ள மாணவர்களுக்கு அவர்களது மடிக் கணினிகளில் நீட் தேர்வுக்கான பாடப்பகுதிசுன் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆசிரியர்கள் தங்களதுமாணவர்களை தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலமாக அவ்வப் போது தொடர்பு கொண்டு நீட்டயிற்சி குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். எனி னும் நேரடிப் பயிற்சியை நடத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.