ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
திருச்சி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறையைக்களையும் வகையில் , ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி, பிராட்டி யூர், எடமலைப்பட்டிபுதூர், தாயனூர் உட்பட 26 ஊராட்சிகளில் 100 சதவீதம் ‘எழுத்தறிவித்தல் இயக்கம்' தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
கள்ளிக்குடியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏ பழனியாண்டி ஆகி யோர முன்னிலையில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எழுத்தறிவித்தல் இயக் கத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கிராமப்புறங்களில் கல்வி அறிவு பெறாதவர்களுக்கு கல்வி அறிவு வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுகிறது. மாநிலம் முழு வதும் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு எழுத்தறிவு ஏற்படுத்தப்படும் என்றார்.
முன்னதாக, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுட்பறைக்கட்டிடத்தைத் திறந்துவைத்த பின்டா, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறி யதாவது: அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறையைக் களையும் வகையில், ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண் டிய அவசியம் உள்ளது. எனவே, முதல் வரின் ஆலோசனை பெற்று பணி நிரவல் கலந்தாய்வு மிக விரைவில் நடத்தப்படும்.
கல்வித் தொலைக்காட்சிக்கு கூடுதல் சேனல்களைத் தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலை யில், கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள், அக்டோபர்மாதம் தேர்வெழு தலாம். அப்போது, கரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அந்தத் தேர்வும் நடத் தப்படும்.
இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, தமிழக முதல்வரிடம் ஆலோசனைக் கேட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். தனித் தேர்வர் களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக கரோனாசூழலை ஆய்வுசெய்து, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு செய்யப்படும். பிளஸ் 2 மாணவர்கள் ஜுலை 22-ம் தேதி (நாளை) மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.