பள்ளி கல்லூரிகள் விரைவில் திறப்பு ...
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2019-20ம் கல்வி ஆண்டில் பிப்ரவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடந்தது. பிற வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்
தொடர்ந்து பள்ளிகளை திறக்காமயே, 1016--21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது. கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால், கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுத இருந்த 10, 11 மற்றும் பிளஸ் -மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பாணியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா இரண்டாம் அலை பரவத் துவங்கியதால் , மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுக் தேர்வுகள் எதுவும் நடத்காத நிலையில், அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.
தற்போது 2021-22 கல்வியாண்டு துவங்கியுள்ளதை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுன்ளன.
வரும் 12ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான தகுதி பட்டியல் வெளிபிடப்பட்டு, 14ம் தேதி சேர்க்கை நடைபெற உள்ளது. 21ம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், 23ம் தேதி தனியார் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -
இருப்பினும் இந்தாண்டாவது பள்ளிகள் திறக்கப்படுமா என தெரியாமல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் தலித்து வந்தனர்.
இந்நிலையில் , நேற்று கல்வித்துறை அதிகாரிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க நட வடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதனையொட்டி, பள்ளிகளை இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. - அதற்கு முன், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு வழங்க, பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்யவும், மாணவர்களுக்கான கட்டண சலுகை பஸ்களை இயக்கவும், மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை துலக்கி உள்ளனர்.
பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் குடிநீர் தொட் டிகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க, பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் - அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து, காமராஜர்பிறந்த நாளான வரும் 15ம் தேதிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags (Don't Read This) :-
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதை தவிர்க்கவும்
ReplyDelete