மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
திருச்செந்தூர். ஜூலை 6மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மனைவி ஜனனியுடன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்தார். கோபுரத்தின் கீழ் அமைந்துள்ள சங்கலி பூதத்தார் சுவாமியை வழிபட்ட பின்னர் கோயிலுக்குள் சென்று மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:'தமிழகத்தில் முதல்வரின் சீரிய முயற்சியால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயாரான சூழல் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு செய்யப்படும். மேலும், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் பள்ளி கல்வி துறை மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
வழக்கறிஞர் கிருபா, ஒன்றிய செய லாளர் செங்குழிரமேஷ், நகர பொறுப்பாளர் வாள் சுடலை, மோகன், பொன் முருகேசன் உள் ளிட்ட பலர் உடன் இருந் னர்.