யூடியூப் வீடியோக்களை மாணவர்களுக்கு அனுப்பக்கூடாது ஆசிரியர்களுக்கு சிஇஓ எச்சரிக்கை
ஈரோடு, ஜூலை 14: யூடியூப் பில் பாடங்களை பதிவு செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனுப்பக் கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட தலைமையாசிரியர்களுக் கான ஆன்லைன் கூட்டம் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் முருகன் தலை மையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.கூட்ட முடிவில் முதன்மை கல்வி அலுவ லர் வெளியிட்ட உத்தர வில், பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்களை தினமும் ஆன்லைனில்
கட்டாயம பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம் வழங்கப் படவேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தினமும் தங்கள் வகுப்பில் குறைந்த பட்சம் 10 மாணவர்களு டன் அலை பேசியில் தொடர்பு கொண்டு பாடங்கள் தொடர்பாக பேச வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் கற்றல் விப ரங்களை பதிவேடுகளில் குறித்துவைக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் வாட்ஸ்அப்மற்றும் கல்வி டிவி பாடப் பகுதிகளை
மாணவர்கள் பார்க்கி றார்களா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். யூடியூப் வீடி யோக்களை வாட்ஸ்அப் குழுவில் அனுப்பக்கூ டாது.
ஆசிரியர்கள் கூகுள் மீட் அல்லது ஜூம் செயலி மூலம் மாணவர்களிடம் நேரடியாகபாடம் நடத்த வேண்டும். திங்கட்கிழமை மட்டும் அனைத்து ஆசி ரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். மற்ற நாட்கள் சுழற்சி முறையில் 50 சதவீதம் வர வேண்டும் என சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.