மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து தற்போது கல்லூரி பயின்று கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உறுதித் தொகையாக வழங்கும் புதிய திட்டம் ஒன்றை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாணவிகள் ஜூன் 30-ம் தேதிக்குள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது கல்லூரிகளின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது பிறகு இந்த கால அவகாசமானது ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது தற்பொழுது மீண்டும் இந்த கால அவகாசத்தை 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி வரை இதற்கு முன்னாள் உயர் கல்வி உறுதித் திட்டத்திற்கு பதிவிடாத மாணவர்கள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிட்டு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை தங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவிகளுக்கு பகிர்ந்து உதவும் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் இது போன்ற பல கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளவும்.