தமிழக பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் !

நாளை கடைசி நாள் ! தமிழக பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் !


      தமிழகத்தில் 2021 22 ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 12 ஆம் வகுப்பு முடித்த பெருமாளான மாணவர்கள் விரும்பி படிக்கும் பாடப்பிரிவுகளில் ஒன்று தான் பொறியியல் படிப்பு. இந்த பொறியியல் படிப்பினை தமிழகத்தில் பயில இரண்டு வழிமுறைகள் உள்ளது 
  • மேனேஜ்மென்ட் கோட்டா என்று கூறப்படுவது அதாவது நேரடியாக கல்லூரிக்கு சென்று விண்ணப்பிப்பது.
  • தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு கலந்து கொள்வது.

   தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு 2022 விண்ணப்பிக்க ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தாமதம் ஏற்பட்டதால் ஜூலை 27 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித் துறை அறிவித்திருந்தது, எனவே நாளை இந்த அவகாசம் நிறைவடைகிறது. 

      எந்த வருடத்திலும் இல்லாத அளவாக 2022 இல் பொறியியல் கலந்தாய்விற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பிற்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.

     தங்களுக்கு தெரிந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.


Post a Comment

Previous Post Next Post
Loading...