நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமப்பாளர் இளையராஜா நியமனம்
நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு. இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி டிவிட்டரில் அறிவித்தார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள்
இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018ம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.