சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தற்பொழுது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதில் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட ஆகலாம் என்றும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் மேலும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்ட பிறகு மட்டுமே மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டும் என்று யுஜிசி தற்போது ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதை ஏற்கனவே கூறிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மேலும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியிட்டு 4 நாட்களுக்கு அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.