12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வரும் 14-ம் தேதி பகல் 12 மணி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியான நிலையில் அந்த பொது தேர்வு மதிப்பெண்களில் திருப்தி படாத மாணவர்கள் வினாத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே ஆணை வெளியிட்டிருந்தது எனவே அவ்வாறு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை முதல் தங்களுடைய விடைத்தாள் நகல்களை அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

       மேலும் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் மறு கூட்டல்-2அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ள Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கொண்டு இரு நகல்கள் எடுத்து 15.07.2022 நண்பகல் 12 மணி முதல் 19.07.2022 மாலை 5 மணிக்குள்ளாக சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு காண கட்டணம் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      மேலும் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டண விபரங்களை ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது வரும் மதிப்பீட்டிற்கு ஒரு பாடத்திற்கு ரூபாய் 505,  மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூபாய் 305 மற்ற பாடங்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 205 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post
Loading...