பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Special Class நடத்த உத்தரவு
தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் அதாவது ஸ்பெஷல் கிளாஸ் ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்கள் எந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள் அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அப்ப பள்ளிகளுக்கான ஆக்சன் பிளான் குறித்த விவரத்தினை இணை இயக்குனர் பணியாளர் தொகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.