பள்ளிகள் அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட வேண்டும்

காலாண்டு விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் !

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 30ம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை அக்டோபர் 10ஆம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதேபோன்று அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டில் காலாண்டு தேர்வுக்கு அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு செய்தி குறிப்பு வழியாக அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.

    எனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு தேர்வு முடிந்து 10.10.2022 அன்று திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.

Post a Comment

Previous Post Next Post
Loading...