வருகின்ற 15ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது !
தற்பொழுது பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கான விண்ணப்பமும் தற்போது நிறைவடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வானது அக்டோபர் ஒன்றாம் தேதியே நடக்க இருந்தது ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமிருந்து பெற்ற கோரிக்கையின் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதில் மொத்தமாக 2,60,557 மாணவ மாணவிகள் பங்கு பெறுகின்றனர் . இதில் 1500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் அடுத்த இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவு போனது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்றது.
விளையாட்டு மற்றும் கலை பிரிவுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவது போன்று தமிழ் மொழியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தேர்வானது நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் மட்டுமே !