அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

5 மாவட்டங்களில் அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு !!


அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு


கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. 

     இதனால், இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை தள்ளி வைத்து, மற்றொரு தேதியில் நடத்துவது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவெடுத்து கொள்ளலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இதன்காரணமாக 5 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


    இன்று நடைபெற இருந்த தேர்வுகளை மறுதேதியில் நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், விடுமுறை விடப்பட்ட நான்கு மாவட்டங்களில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் அறிவித்து உள்ளார். 
   அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வில், நாகர்கோவில் மையத்துக்கு மட்டும், தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
Loading...