மே 6ஆம் தேதி வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகிறது |
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது; மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், கணினி அறிவியல், உயிரியல், கணினி பயன்பாடுகள், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
TN 12th Standard Result Date |
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட செய்தி குறிப்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதியும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.