மே 3ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் தயாரா?

 மே 3ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் தயாரா?

நிச்சயமாக இல்லை.. ஏனென்றால்..

  ஒரு வருடத்தில் 210 நாட்கள் Class எடுக்கனும் னு GOVERNMENT சொல்லியிருக்கு... ஒவ்வொரு வருடமும் இந்த 210 நாட்கள் ல தான் FULL SYLLABUS (100%) நடத்துவாங்க..மிச்சம் இருக்கிற நாட்கள் ல தான் HOLIDAYS, SATURDAY SUNDAY LEAVE, SCHOOL EXAMS, REVISION STUDY,PRACTICALS EXAM இது எல்லாம் நடைபெறும்..இது வழக்கம்.

ஆனால் கொரோனா காரணமாக,இந்த வருடம்,எப்பவும் போல, பள்ளிகள் செயல்படவில்லை. January 19ம் தேதி தான் School open ஆச்சு..May 3ம் தேதி Exam னு சொல்லிருக்காங்க.. கம்மியான நாட்கள் தான் இருக்கு ..எப்படி பாடம் நடத்துவது னு கேட்டால், "40% Syllabus குறைச்சிருக்கிறோம்..மிச்சம் இருக்கிற 60% மட்டும் படிச்சா போதும்" னு அரசு சொல்றாங்க...

  சரி.

100% Syllabus நடத்த 210 நாள் அப்படினா, 60% Syllabus நடத்த எவ்வளவு நாள்?

  கணக்குப்படி, 126 நாட்கள் தேவை ! 

If 100% in 210 days,then 60% in 126 days. (mathematically)

இந்த வருடம், சனிக்கிழமையும் School னு சொல்டாங்க...

ஆனால், ஏப்ரல் ல ELECTION வருது..இதனால் 5 நாட்கள் பள்ளி செயல்பட முடியாது..அதேபோல, PUBLIC EXAMக்கு முன்னாடி, 5 நாட்கள் PRACTICAL EXAM வேற வைக்கனும்.. கூட்டி,கழித்து பார்த்தால் , 19/01/2021 முதல் 30/04/2021 வரை 73 நாட்கள் மட்டுமே தான் உள்ளன!

(ஞாயிறு விடுமுறை,அரசு விடுமுறை,செய்முறைத் தேர்வு,தேர்தல் நாட்கள்..இவையெல்லாம் கழிய)

60% பாடம் நடத்த 126 நாட்கள் அடிப்படையாக தேவை..அதன் பின் REVISION STUDY, REVISION EXAM இதெல்லாம் வேறு இருக்கிறது.

     இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் +2  மாணவர்களுக்கு சரியான கால அவகாசம் கொடுக்காமல், MENTAL PRESSURE கொடுப்பது சரி அல்ல‌‌...எனவே, பொதுத்தேர்வை July மாதம் தள்ளிவைத்தால் தான் சரியாக இருக்கும்.

4 Comments

Previous Post Next Post
Loading...