9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு உறுதி

 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு உறுதி

           தமிழகத்தில் Corona பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் படிப்படியாக தற்போது திறக்கப்பட்டு வருகின்றநிலையில் ஜனவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.

       இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் பொழுதே  9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றி ஓர் அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதேபோன்று 31ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. 

        இந்த நிலையில் மாணவர்கள் பள்ளி திறப்பை எதிர்த்து ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் மாணவர்களின் எதிர்ப்பு  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றதால் இதைப்பற்றி பிரபல தமிழக YouTuberரான மதன் கௌரி (Madan Gowri) அவர்களும் பள்ளி திறப்பு பற்றி ஓர் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அனைத்தும் போக மாணவர்களுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டு இருந்தது , அதாவது பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பமா, இல்லையா என்பது பற்றி.

       எனவே தற்போது நமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்படுவது உறுதி என்று தற்பொழுது கூறியுள்ளார். மேலும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது அவசியம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

      எனவே இந்த பயனுள்ள பதிவை அனைத்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பகிர்ந்து மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

1 Comments

Previous Post Next Post
Loading...