பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் ?

 பொதுத்தேர்வு அட்டவணை கூடிய விரைவில் வெளியிட வாய்ப்பு. 

 ⭕ தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் முடிவாகிறது. 

 ⭕ தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை.

    ஏற்கனவே பல பேட்டிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் சட்டப்பேரவை தேர்தல் தேதி வெளியிட்ட பிறகு பொதுத்தேர்வு தேதிகள் ,  அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

   இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டா ? இல்லையா ? பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் ? என்று பல சந்தேகங்கள் மாணவர்களுக்கு இடையிலும் ஆசிரியர்களுக்கு இடையிலும் எழுந்து வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்புகள் உள்ளது. 

   எனவே தேர்தல் தேதி குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடைபெறுகிறது , எனவே இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் பொது தேர்வு அட்டவணையும் கூடிய விரைவில் வெளிவரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post
Loading...