கல்லூரிப் பேராசிரியர் களைப் போல பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது கொரோனா , பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் பள்ளிக்கல்வித் துறை யினரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது மேல்நிலைத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பள்ளிகளுக்கு மாணவர்களை வர வேண்டாம் என்ற போதும் ஆசிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது அதேநேரம் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வராமல் தங்களது வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது கல்லூரி பேராசிரியர்கள் போன்ற பள்ளி ஆசிரியர்களின் உயிரும் முக்கியத்துவம் வாய்ந்ததே எனவே பேராசிரியர்களை போன்று பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.