தினமும் பள்ளிக்கு வருவதால் அபாயம் : வேலை நாளை இறுதி செய்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தினமும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் இருப்பதால் பள்ளி வேலைநாள் இறுதி செய்து கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம்
கொரோனா ஏற்பட்டதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டன தமிழகத்திலும் முழு ஊரடங்கு இருந்த காலத்தில் ஆசிரியர்கள் உட்பட யாரும் பள்ளிக்கு வர வைக்கப்படவில்லை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 9 , 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சமூக இடைவெளி முக கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் மீண்டும் கொரோனா தொடங்கியதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது தேர்தலுக்கு முன்பாக பதினோராம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டதும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .
இன்றுடன் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நிறைவடைகிறது ஆனால் பள்ளி வேலைநாள் இறுதி செய்யாமல் அரசு உள்ளது இதனால் தினமும் பட்டதாரி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு கொரோனா ஏற்படும் அச்சம் இருப்பதால் பள்ளி வேலைநாளில் இறுதி செய்து கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில தலைவர் மகேந்திரன் பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரச்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் விரிவாகக் கூறியுள்ளன.