வெள்ளை மஞ்சள் - பூலாங்கிழங்கு - பயன்கள்

வெள்ளை மஞ்சள் - பூலாங்கிழங்கு:


      பூலாங்கிழங்கு என அழைக்கப்படும்  வெள்ளை மஞ்சள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இது பல நல்ல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது . வெள்ளை மஞ்சள், கசப்பு சுவை கொண்டது. தற்போது இதன் பயன்பாடு மக்களிடத்தில் குறைந்து விட்டதால் சிறு நினைவூட்டலுக்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

பயன்கள் :

     வெள்ளை மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகும் ,எனவே தான் பெண்கள் , குழந்தைகள் குளியல் பொடியில் வாசனைக்காகவும், உடல் நலத்திற் காகவும் இதனை பயன்படுத்தினார்கள்.

    தோல்நோய்களுக்கு மிக மிக நல்ல மருந்தாக இது இருக்கிறது
வெள்ளை மஞ்சளை நீரில் இட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து பருகி வந்தால் வயிற்று புண் சரியாகும்.

     இது இஞ்சி ,மஞ்சள் இரண்டின் மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

      குளியல் பொடியாக கஸ்தூரி மஞ்சளையும், பாசிபருப்பையும், பூலாங்கிழங்கையும் சேர்த்து அரைத்து உபயோகிக்கும் போது,தோல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் ஆகிறது.
பூலாங்கிழங்குடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிவந்தால், கரும்புள்ளிகள்,பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

     வெள்ளை மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து  முகத்தில் தடவி, காய்ந்தபின் கழுவி வந்தால்  முகத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி அழகாகும் .
முட்டையின் வெள்ளை கருவுடன் இதை பொடிசெய்து கலந்து  முகத்தில் தடவி காய்ந்தபின் குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து இளமையான  தோற்றத்தை பெறலாம்.

     பெண்கள் தினமும் இதை குளியல் பொடியில் சேர்த்து குளித்து வந்தால் உடலில் நறுமணம் கமழும்,வாசனை திரவியங்களே தேவையில்லை .
இது வெட்டு காயங்களுக்கும்,தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கும் நல்ல மருந்தாகி,தழும்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது .

   முன்பு பேறுகால நேரத்திலும் ,மாதவிடாய் காலத்திலும் பெண்கள் தவறாமல் இதை பயன்படுத்தினார்கள்.

    வெள்ளை மஞ்சளை தேநீராக செய்து அருந்தினால் கர்ப்பப்பை இறக்கம்,கட்டிகள்,முறையற்ற மாதவிடாய்  கோளாறுகள் சரியாகும்.

   (இதனை சாப்பிடும் போது பாகற்காய்,அசைவ உணவுகள்,நல்லெண்ணெய் தவிர்க்க வேண்டும்)


Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...