சைவம் - அசைவம் எது உடலுக்கு நல்லது ?

சைவம் - அசைவம் எது உடலுக்கு நல்லது ?

     சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.


     நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. இந்த காய்கறிகள் மட்டுமல்ல இன்னும் பல காய்கறிகளில் கணக்கிலடங்கா சத்துகள் அடங்கியுள்ளன.

    சைவ உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருட்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. வெங்காயம், பூண்டு, மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

     கண்டுகொள்ளாமல் விடப்படும் பாகற்காயில் கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம், ஆகியவை அதிகமாக இல்லாவிட்டாலும் நோயை எதிர்க்கும் திறன் உள்ள சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. இவற்றில் இருக்கும் முக்கிய சத்துக்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கின்றன.
 
     வெண்டைக்காயில், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம், மாவுசத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து என அதிகமான சத்துகள் உள்ளது. இது உடலின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. கர்ப்பிணி பெண்கள் தினமும் சாப்பிடலாம்.

     கல்லீரலை ஹெபடைடிஸ் என்ற வைரஸ் எளிதாக தாக்கிவிடும். இதில் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் பரவாக உள்ளன. இவை கல்லீரலை மாற்றம் செய்யும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு சைவம் மட்டுமே தீர்வு. திராட்சை, கேரட், எலுமிட்சை, சீரகம், பூண்டு ஆகியவற்றில் கல்லீரல் பிரச்சனைக்கு தக்க தீர்வு உள்ளது.

     இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

     சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
     பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் இரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

     மேற்கூறிய பிரச்சனைகளுக்கு காரணம் அசைவம் என்றே கூறலாம். உதாரணமாக கோழி இறைச்சியை எடுத்து கொள்வோம்.

      கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர்.  டெட்ராசைக்ளின்(Tetracyclin), ஃப்ளுரோகு வினோலோன்(Fluroquinolone), அமினோகிளைகோஸைடு (Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன.
     கோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். மற்ற அசைவங்களாக கருதப்படும், மீன் மற்ற இறைச்சிகளில் புரதம் இருக்கும் அளவு நார்சத்துகள் இருப்பதில்லை. சிறுநீரக பாதிப்பு, எலும்பில் கால்சிய பிரச்சனை, ஜீரண சக்தி குறைபாடு இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
      இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு உலக முழுவதும் வாரத்திற்கு 1000 பேர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags (Don't Read This) :-

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...