கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேள்விகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர் மற்றும் உயிரியல் ஆசிரியர் வழங்கும் பதில்கள

    கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. எனவே, பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலும், உயிரியல் பட்டதாரி என்ற முறையிலும் FAQs ஐ தொகுத்துள்ளேன். 




      இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை (Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ) க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 


இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 


ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் CT Lungs எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.


உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் RT PCR பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 


அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி 99 சதவீதம் மூக்கு வழியாக தான் இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 


கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 


இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான Cytokine Storm அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 


முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 


Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 


கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 


வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 


தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 


நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 


இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 


Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 


    கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது. 

மூன்று வேளை வேப்பிலை அல்லது நொச்சி இலை ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.

வாழ்க வளமுடன் & நலமுடன்


Tags (Don't Read This) :- 

    Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...