வரலாற்றில் இன்று 02/05/2021-ஞாயிறு


1536 : இங்கிலாந்தின் அரசி அன்னே பொலின் விபச்சாரம், மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார்.

1568 : லோச் லெவன் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்காட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார்.

1611 : இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் ஆதரவால் பைபிளை இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு லண்டனில் வெளியிடப்பட்டது.

1670 : இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் மன்னர் விலங்குகளின் முடி விற்பனை உரிமையை ஹட்சன் விரிகுடா கம்பெனிக்கு தந்தார்.

1889 : எத்தியோப்பியா இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்ரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்கு தரப்பட்டது.

1919 : பவேரியாவில் கம்யூனிஸ்ட் அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டது.

1927 : லாகூரில் முஸ்லிம் - சீக்கியர் கலவரம் மூண்டது.

1928 : அமெரிக்காவின் கேலிச்சித்திர ஓவியர் வால்ட் டிஸ்னி பிரபல மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1933 : ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

1936 : எத்தியோப்பியா மன்னர் ஹெய்ல் செலாஸி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

1945 : இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்காவின் வான் படையினர் ஜெர்மனியின் வுபெலின் வதை முகாமை விடுவித்தனர்.
இங்கு ஆயிரம் கைதிகள் உணவில்லாமல் இறந்து கிடந்தனர்.
இரண்டாம் உலகப் போர் :- பெர்லின் நகரை கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1946 : இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் விவசாயத் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன.

1952 : உலகின் முதலாவது ஜெட் விமானம் லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையே இயக்கப்பட்டது.

1964 :  வியட்நாம் போர் :- சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.

1972 : அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள வெள்ளிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 91 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1986 : செர்னோபில் அணு உலை விபத்து நடந்து ஆறு நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

1994 : போலந்து, கடான்ஸ்க் நகரில் பேருந்து ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

1998 : ஐரோப்பிய மத்திய வங்கி பிரஸ்ஸல்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

2004 : நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.

2008 : மியான்மரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,38,000 பேர் உயிரிழந்தனர்.

2014 : ஆப்கானிஸ்தான், பாதக்சான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிரிழந்தனர்.



Tags (Don't Read This) :- 

     Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...