பிளஸ் 1க்கு கட்டாய நன்கொடை அரசு பள்ளிகள் மீது அதிருப்தி.
சென்னை , ஜூன் 24பிளஸ் 1 மற்றும் ஆங்கில வழி மாணவர் சேர்க்கைக்கு, அரசு பள்ளிகளில் கட்டாய நன் கொடை வசூலிப்பதாக, பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தாத நிலை யில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப் படையில் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல் லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்கு, அரசு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது.ஆனால், பிளஸ் 1ல் மாணவர்களுக்கு விருப் பமான பாடப் பிரிவுகளை வழங்குவதற்கும், ஆங்கில வழி வகுப்புகளில் இடம் தரவும், அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்ப தாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் பெயரில் நன்கொடை பெறுவதாகவும், குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நன் கொடை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், பெற் றோர் கவலை தெரிவித்துள்ளனர். நன்கொடை செலுத்த இயலாதவர்களின் பிள்ளைகளுக்கு, ஆங்கில வழி மற்றும் பிளஸ் பல் விருப்பமான பிரிவுகளில் சேர்க்கை வழங்கா மல், தலைமை ஆசிரியர்கள் இழுத்தடிப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.நன்கொடை தர இயலாதவர்களுக்கு, விருப்ப மான பாடப் பிரிவு வழங்காமல், தொழிற்கல்வி அல்லது மாணவர்கள் ஆர்வம் காட்டாத பிரிவு களை ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச் சர் மகேஷ் மற்றும் பள்ளி கல்வித்துறை அதி காரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ள னர். இதற்கிடையில், நேற்று விழுப்புரம் மாவட் டத்தில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.