அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வேலூர், ஜூன் 24: கொரோனா பரவல் கார ணமாக குழந்தைகளின் பள்ளிக்கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. தமிழ கத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட் டுள்ளதால் உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. தனி யார் பள்ளிகளில் மட்டும் தொடக்கப்பள்ளி மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிக ளில் படிக்கும் மாணவர் களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற் றோர் தனியார் பள்ளிக ளில் சேர்ப்பதை தவிர்த்து அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிக ளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனால் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா 2ம் அலை தமிழகத் தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய'மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைபட்டது.
இந்நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 14ம்தேதி முதல் தொடங்கி உள்ளது. இதற்காக தலைமை ஆசி ரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்குதினந்தோறும் வந்து சேர்க்கைபணிகளை மேற் கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிளஸ்1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைதீவிர மாக நடந்தது வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாண வர் சேர்க்கை அதிக மாக இருந்து வருகிறது. சேர்க்கப்பட்டுள்ள புதிய சேர்க்கை மாண வர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர சேர்க்கை மற் றும் டி.சி. வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து கல்வி அலுவலர்களும் தினசரி அடிப்படையில் இஎம்ஐஎஸ் போர்ட்டல் (எமிஸ்) இணையதளத்தில் அனைத்து புதிய சேர்க்கைகளும் உள் ளிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பதிவில் எந்த வித குள றுபடியும் ஏற்படாமல் தேவையான நடவடிக் கைகளை எடுக்க வேண் டும். பள்ளிகளில் இருந்து வழங்கப்பட்ட டிசிசான் றிதழ்கள் விவரமும் எமிஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
முதல் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக பதிவு மேற்கொள் ளும் முன் அந்தமாணவன் வேறு எங்கும் இதற்கு முன் படிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த மாணவன் ஏற்க னவே வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் எல் கேஜி, யுகேஜி படிந்திருந் தால் அந்த மாணவனுக்கு ஐடி இருக்கும். அதை பயன்படுத்தி சேர்க்கை செய்யலாம். முதல் வகுப்பு மட்டுமின்றி வேறு எந்த வகுப்பாக இருந் தாலும் புதிய பதிவை மேற் கொள்ளலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் தான் அந்த மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் உடனுக்கு உடன் பெற்று வழங்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கள் கூறினர்