சென்னை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகத்தையும், கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. 2 முதல் 12-ம் வகுப்பு வரை இதற்காக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களின் புதியகாணொலிகள் வடிவமைக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தன. இந்நிலையில் புதிய கல்வியாண் டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பள்ளிமாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.292 கோடி செலவில் செயல் படுத்தப்படும் இத்திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி களில் பயிலும் 69 லட்சம் மாண வர்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் இறுதியில் முதல் வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு குறித்த கால அட்டவணை விரைவில் வெளி யிடப்படும் என்றும், அரசுப்பள்ளி களில் மாணவர்களுக்கு நாளை (ஜூன் 21) முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Kalvi TV Time table for All Classes - Click Here
- TN Text Books for All Classes - Click Here