பள்ளி, கல்லூரிகள் ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன : தெலங்கானா
ஹைதராபாத் : தெலங்கானா அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அண்டை மாநிலங்களை விட தெலங்கானாவில் கரோனா தொற்று குறைந்துள்ளதாலும் அதிக எண்ணிக்கையில் மக்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளதாலும் ஊரடங்கை முற்றிலும் நீக்கலாம் என அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தெலங்கானாவில் இன்று முதல் ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொள்ளப் படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து 100 சதவீதம் இயங்க உள்ளது. ஆட்டோக்கள், டாக்ஸிக்களும் இயங்கலாம், அரசு மற்றும் தனி யார் அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இன்று முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
பள்ளி, கல்லூரிகள் ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. ஊரடங்கு நீக்கப்பட்டாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப் பது உள்ளிட்ட பாதுகாப்பு விதி முறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், அனை வரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் நேற்று முன்தினம் 1.4 சதவீதமாக இருந்தது. புதிய நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 1,400 ஆகவும், உயிரிழப்பு 12 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.