சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி, ஜூன் 16: சிபி எஸ்இ 12ம் வகுப்பு மாண வர்களுக்கு வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின் தீவிர தாக்குதல் காரணமாக, பள்ளிகளும் கல்லூரி களும் மூடப்பட்டுள் ளன. இதனால், மாண வர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. தேர்வை ரத்து செய்ய உத்தரவிடும்படி மாண வர்கள், பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது.
மேலும், 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன் றம், இந்த மாணவர் களுக்கு எதன் அடிப்ப டையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என் பதை 2 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ, ஐசி எஸ் இ நிர்வாகங் களுக்கு கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறை குறித்து பரிந்துரை செய் யும்படி 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிய மித்துள்ளது.
இந்நிலையில், இக்குழு வின் பரிந்துரை அடிப்ப டையில், மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர் வில் பெற்ற மதிப்பெண், 11, 12ம் வகுப்புகளில் பள் ளிகள் நடத்திய தேர்வு கள், உள்மதிப்பீடு மற்றும் இந்தாண்டு நடைபெற்ற செயல் முறை தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப் பெண்களை அடிப்படை யாக கொண்டு, 'வெயிட் டேஜ்' முறையில் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வழங்க சிபிஎஸ்இ நிர்வா கம் முடிவு எடுத்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர் பான அறிவிப்பை அடுத்த ஓரிரு நாளில் சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.